சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

உருமாறிய கொவிட்-19 ஒமைக்ரான் பற்றிய அண்மைத் தகவல்

உருமாறிய சார்ஸ் கோவ்-2-ஓமைக்ரான் குறித்து அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்

Posted On: 03 DEC 2021 1:49PM by PIB Chennai

உலக சுகாதார அமைப்பால் 26 நவம்பர், 2021 அன்று ஒமைக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள, உருமாறிய புதிய வகை கொவிட்-19 குறித்து அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களுக்கான விடைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த பதில்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது:https://www.mohfw.gov.in/pdf/FAQson Omicron.pdf

ஓமைக்ரான் என்றால் என்ன? கவலை அடையத்தக்க உருமாற்றம் செய்தது எது?

இது சார்ஸ் கோவ்-2-வின் உருமாறிய புதிய வகை ஆகும், இது அண்மையில் தென்னாப்பிரிக்காவின் 24 நவம்பர் 2021 அன்று கண்டறியப்பட்டு B.1.1.529 அல்லது ஓமைக்ரான் (கிரேக்க எழுத்துக்களின் அகர வரிசைப்படி ஆல்ஃபா, பீட்டா, டெல்டா போன்றவற்றின் அடிப்படையில்) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் மிக அதிக எண்ணிக்கையில் உருமாற்றம் அடைந்திருப்பதுடன், குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட அதிவேகமாக பரவக்கூடிய புரதம் என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை  தாக்கி அழிக்கும் தன்மை பெற்றதாகும்

ஓமைக்ரான் உருமாற்றம் குறித்த தொகுப்பு, முன்பு, தொற்று அதிகரிப்பு மற்றும் / அல்லது நோய் எதிர்ப்பு சக்தி ஒழிப்புடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் திடீரென தொற்று பாதிப்பு அதிகரித்ததால், ஓமைக்ரான், கவலை அளிக்கத்தக்க உருமாற்றம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777594



(Release ID: 1777701) Visitor Counter : 244