பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கடந்த 3 ஆண்டுகளில் 57 லட்சத்தில் 54 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன - மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்

Posted On: 02 DEC 2021 3:54PM by PIB Chennai

கடந்த 3 ஆண்டுகளில் 57 லட்சத்தில், 54 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தித் துறை; விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPGRAMS) தாக்கல் செய்யப்பட்ட மொத்த பொது புகார்களின் எண்ணிக்கை 57, 25,443 ஆகும். இதில் 54, 65,826 புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில் ஊழல்/முறைகேடுகள், நிலம் தொடர்பான பிரச்சனைகள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள்/விலங்குகள் நலன்/வனப் பாதுகாப்பு, துன்புறுத்தல்/அட்டூழியங்கள், காவல் துறை, போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சில பொதுவான புகார்கள் அடங்கும் என அந்த பதிலில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777242

---- 



(Release ID: 1777598) Visitor Counter : 169


Read this release in: English , Urdu , Hindi , Punjabi