சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைகளின் பணமயமாக்கல்

Posted On: 02 DEC 2021 3:58PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை பயன்முறையின் கீழ் நடப்பு நிதியாண்டில் 390 கி.மீ நீள சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணமயமாக்கியுள்ளது. ரூ 7350 கோடி சலுகை மதிப்பு மற்றும் ரூ 495 கோடி மூலதன செலவினங்களுடன் இது செய்யப்பட்டுள்ளது.

 

கூடுதலாக 450 கிமீ நீளத்திற்கான சாலைகள் 3 பகுதிகளாக சுங்க கட்டண முறையில் ஏலம் எடுக்கப்பட்டது. மேலும், மொத்தம் 4,912 கி.மீ நீளம் கொண்ட 86 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இது தவிர, 2022-23-ம் ஆண்டில் 5,500 கி.மீ சாலைகளை பணமயமாக்கவும், 2023-24-ம் ஆண்டில் 7,300 கி.மீ சாலைகளை பணமயமாக்கவும், 2024-25-ம் ஆண்டில் 8,900 கி.மீ சாலைகளை பணமயமாக்கவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777244



(Release ID: 1777413) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Marathi