உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் விளையும் அழுகக் கூடிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வழி வகுக்கும் கிரிஷி உடான் 2.0
प्रविष्टि तिथि:
02 DEC 2021 2:35PM by PIB Chennai
மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் விளையும் அழுகக் கூடிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல கிரிஷி உடான் 2.0 வழிவகை செய்கிறது. இந்தத் திட்டம் அனைத்து வேளாண் விளைபொருட்களையும் குறிப்பாக நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் விளையும் பொருட்களை, தடையற்ற முறையில், குறைந்த செலவில் உரிய நேரத்தில் விமானம் மூலம் எடுத்துச் செல்வதை உறுதி செய்கிறது.
வோளண் விளைபொருட்களான தோட்டக்கலை உற்பத்திப் பொருட்கள், மீன், கால்நடை சார்ந்த உணவுப் பொருட்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இத்திட்டத்தின் கீழ் எடுத்துச் செல்லப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்v https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777189
****
(रिलीज़ आईडी: 1777381)
आगंतुक पटल : 354