புவி அறிவியல் அமைச்சகம்

புவி வெப்பமாதலின் தாக்கம் குறித்த ஆய்வு

Posted On: 02 DEC 2021 2:13PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொற்ப்பு) இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

நாடு முழுவதும் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை மண்டல அளவில் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர் வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் கீழ் இயங்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் அவ்வப்போது கண்காணித்து வருகிறது.

பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த ஆய்வுகளை ஐஐடி புவனேஸ்வர், எம்என்ஐடி ஜெய்ப்பூர், ஐஐடி தில்லி, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், ஐஐடி ஜோத்பூர், எஸ்விஎன்ஐடி சூரத், ஐஐடி காந்தி நகர், ஐஐடி மும்பை, என்ஐடி  சுரத்கல்  , ஐஐடி கரக்பூர்  உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

 இந்தியாவில்   நிலத்தடி நீர் மட்டத்தை செயற்கை முறையில் பெருக செய்வதற்கான பெருந்திட்டத்தை http://cgwb.gov.in/documents/masterplan-2013.pdf  எனும் முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777177

****



(Release ID: 1777340) Visitor Counter : 121


Read this release in: English , Urdu , Bengali