குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய தகுதி விதிகள்

Posted On: 02 DEC 2021 2:01PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நாரயண் ராணே கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

26 ஜூன் 2020 தேதியிட்ட அறிவிப்பு எண் 2119 வாயிலாக ஆலை மற்றும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்களில் முதலீடு மற்றும் நிறுவனங்களின் வர்த்தகம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை வகைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அளவுகோல்களை அரசு அறிவித்தது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு ஆவணங்கள் எதுவும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. பதிவு செய்வதற்கு ஆதார் மற்றும் பான் எண் போதுமானது. இந்த நடைமுறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020 ஜூலை 1 முதல் பொருந்தும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:           https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777171

 

                                                                  *****



(Release ID: 1777317) Visitor Counter : 199


Read this release in: English , Urdu , Bengali , Telugu