நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள 179 விலைக் கண்காணிப்பு மையங்களில் இருந்து 22 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அன்றாட அடிப்படையில் மொத்த மற்றும் சில்லரை விலைகளை மத்திய அரசு கண்காணிக்கிறது

Posted On: 01 DEC 2021 3:28PM by PIB Chennai

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தில் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே எழுத்து மூலம் அளித்த பதிலில், மாநில அரசுகள் / யூனியன் பிரதேச நிர்வாகங்களால் அமைக்கப்பட்டுள்ள 179 விலைக் கண்காணிப்பு மையங்களில் இருந்து 22 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அன்றாட அடிப்படையில் மொத்த மற்றும் சில்லரை விலைகளை மத்திய அரசு கண்காணிக்கிறது என்றார். 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நாட்டில் போதிய அளவு கிடைப்பதற்கும், விலைகள் சீராக இருப்பதற்கும் அவ்வப்போது அரசால்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பல பொருட்கள் சேர்ந்த தொகுப்பு பேக்கேஜில் ஒவ்வொரு பொருளின் விலைக் குறிக்கப்பட்டிருப்பதைக் கட்டாயமாக்குவதன் மூலம்  நுகர்வோர் நலன் பாதுகாப்புக்கான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.   முன்கூட்டியே, பேக் செய்யப்பட்ட பொட்டலங்களில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையை அவற்றின் மீது குறிப்பிட அறிவுறுத்தப்பட்டிருப்பதன் மூலம், எண்ணிக்கை தொடர்பான குழப்பம் நீக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நுகர்வோர் பாதுகாப்பு, தரங்களின் முக்கியத்துவம், ஹால்மார்க் முத்திரையிடும் திட்டம், குறைந்தபட்ச சில்லரை விலை தொடர்பான விழிப்புணர்வு, எடை மற்றும் அளவு சரிபார்த்தல் போன்றவற்றில், நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சித்திட்டங்கள், இணைய வழி கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படுவதாக அமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.  இவற்றில் கல்வி நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தொழில் நிறுவனங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை ஈடுபடுத்தப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1776808



(Release ID: 1777004) Visitor Counter : 140


Read this release in: Malayalam , English , Urdu , Bengali