ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக வளர்ச்சித் துறையில் கொவிட்-19 தொற்றின் தாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
30 NOV 2021 4:34PM by PIB Chennai
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் நிவாரணம் வழங்குதலுக்கான நடவடிக்கைகளை ஊரக வளர்ச்சி அமைச்சகம் எடுத்துள்ளது. இருப்பினும் ஊரக வளர்ச்சித்துறையில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் குறித்த எந்த ஆய்வையும் அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.
மத்திய நிதி அமைச்சகம் 2020-ஆம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் நிவாரணத்தொகுப்பை அறிவித்தது. ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருந்த மகளிருக்கு மாதத்திற்கு ரூ.500 வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வகையில் மொத்தம் ரூ.30,944.44 கோடி, 20.64 கோடி பெண்களுக்கு விடுவிக்கப்பட்டது.
தேசிய சுமூக உதவித்திட்டத்தின் கீழ் முதியோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கென ரூ.500 வீதம் இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. 2020 ஏப்ரல் மாதம் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தில் ரூ.20 உயர்த்தப்பட்டது.
இது தவிர மத்திய அரசு கரிப் கல்யாண் ரோஸ்கார் அபியான் என்னும் 125 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்தை துவக்கியது. பீகார், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 116 மாவட்டங்களில் 25 பணிகள் தேர்வு செய்யப்பட்டு புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவை தவிர பல்வேறு துறைகளின் மூலம் ஊரகப்பகுதி வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776462
****
(வெளியீட்டு அடையாள எண்: 1776607)
வருகையாளர் எண்ணிக்கை : 160