மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மாணவர்களின் மனநலம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்காக அரசு எடுத்த முன்முயற்சிகள்
Posted On:
29 NOV 2021 5:11PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை வெளியிட்டார் .
'மனோதர்பன்' எனும் செயலூக்கமிக்க முன்முயற்சி ஒன்றை கல்வி அமைச்கம் மேற்கொண்டுள்ளது. கொவிட் பரவல் மற்றும் அதற்கு பிந்தைய காலத்திலும் மனநலம் மற்றும் உளவியல் நல்வாழ்வுக்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உளவியல் ஆதரவை வழங்குவதற்கான பரந்த அளவிலான நடவடிக்கைகளை இது உள்ளடக்கியதாகும்.
மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள் மற்றும் கவலைகளைக் கண்காணித்து அவர்களை மேம்படுத்துவதற்கும், மனநலம் மற்றும் உளவியல் தொடர்பான ஆதரவை வழங்குவதற்கும் கல்வி, மனநலம் மற்றும் உளவியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆலோசனை சேவைகள், ஆன்லைன் ஆதாரங்கள் மற்றும் உதவி எண் மூலம் கொவிட்-19-க்கு பிறகும் இது தொடரும்.
மேலும் விவரங்களுக்கு http://manodarpan.education.gov.in எனும் இணையதளத்தை பார்க்கலாம் அல்லது 8448440632 எனும் தேசிய இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிக் கல்விக்கான அணுகலை அனைவருக்கும் அளிப்பதும், பின்தங்கிய குழுக்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரை இணைப்பதன் மூலம் சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
இலவச மற்றும் கட்டாய கல்வியில் குழந்தைகளுக்கான உரிமை, தேசிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சமக்ர சிக்க்ஷா திட்டம் மேற்கொண்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் ஆகியவற்றில் புதிய சேர்க்கைக்கான மொத்த இடங்களில் 3 சதவீதம் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனுக்காக கட்டண கழிவு, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நிபுண் பாரத் எனும் தேசிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு இயக்கத்தை மத்திய அரசின் சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 5 ஜூலை 2021 அன்று தொடங்கியது.
ஒவ்வொரு குழந்தையும் மூன்றாம் வகுப்புக்குள் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவற்றில் தேர்ச்சி இலக்கை அடைய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முன்னுரிமைகள் மற்றும் செயல்திட்டங்களை இயக்கத்தின் வழிகாட்டுதல்கள் வகுத்துள்ளன. 3 முதல் 9 வயது வரையிலான வளர்ச்சி இலக்குகளும் வகுக்கப்பட்டுள்ளன.
நிபுன் பாரத் பணியை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் துறையின் இணையதளத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன:
https://dsel.education.gov.in/sites/default/files/NIPUN_BHARAT_GUIDELINES_EN.pdf
மேலும் விவரங்களுக்கும், கீழ்காணும் செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776154
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776156
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776157
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776158
****************
(Release ID: 1776255)
Visitor Counter : 462