பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு கிழக்கு கடற்படை பிரிவு பிரியாவிடை

प्रविष्टि तिथि: 28 NOV 2021 5:27PM by PIB Chennai

கிழக்கு கடற்படை கமாண்ட்-டின்ஃபிளாக்   ஆபிசர் கமாண்டிங் இன் சீப் வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங்குக்கு இன்று விசாகபட்டினம் கடற்படை தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் பிரியாவிடை அளிக்கப்பட்டது. அணிவகுப்பைப் பார்வையிட்ட பகதூர் சிங், பல்வேறு கப்பல்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த கடற்படைஃ பிரிவுகளை ஆய்வு செய்தார். இஎன்சி-யின் தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ் குப்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனைத்து  ஃபிளாக்  அதிகாரிகள், கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும்  இதர   அமைப்புக்களின் கமாண்டிங் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், சம்பிரதாய முறைப்படி, அளிக்கப்பட்ட வழியனுப்பு நிகழ்ச்சியை வைஸ் அட்மிரல்  ஏபி சிங் ஏற்றுக்கொண்டார். மேற்கு கடற்படை காமாண்டின் ஃபிளாக் ஆபிசர் கமாண்டிங் இன் சீப் ஆக பொறுப்பு ஏற்பதற்காக அவர் மும்பை புறப்படுகிறார். 

****


(रिलीज़ आईडी: 1775915) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी