பாதுகாப்பு அமைச்சகம்

எல்லை சாலைகள் அமைப்பின் மோட்டார் சைக்கிள் குழு, 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்தது

Posted On: 28 NOV 2021 9:23AM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள எல்லை  சாலைகள் அமைப்பினர், 4 கட்ட சுற்றுப் பயணத்தில் 10,000 கி.மீ தூரத்தை நிறைவு செய்துள்ளனர்.

சுதந்திர இந்தியாவின் வைர விழாவை கொண்டாடும் வகையில், எல்லை     சாலைகள்      அமைப்பினர், நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர். தேசிய ஒற்றுமை, சாலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் புதுதில்லியில் கடந்த அக்டோபர் 14ம் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் கட்ட பயணத்தில் இமாச்சலப் பிரதேசம், லே, லடாக், ஜம்மு, காஷ்மீர் மலைப் பகுதிகளில் இந்த குழுவினர் பயணம் மேற்கொண்டனர்.

இரண்டாவது கட்ட பயணத்தில் பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பயணம் மேற்கொண்டனர்.

3வது கட்ட பயணத்தில், எல்லை    சாலைகள்        அமைப்பினர் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர்.

நான்காவது கட்ட பயணத்தில், 6 மாநிலங்களில் 3,200 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்டனர். 44 நாட்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்ட அவர்கள்கடந்த 27ம் தேதி கொல்கத்தா சென்றடைந்தனர். இதுவரை இந்த குழுவினர் 10,000 கி.மீ தூரத்தை கடந்துள்ளனர்.

இந்த பயணத்தில் மோட்டார் சைக்கிள் குழுவினர் பள்ளி,கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினரை சந்தித்து உரையாற்றினர். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் எப்படி பங்களிக்க முடியும், என்பது குறித்தும் ஆலோசித்தனர். 

அடுத்த கட்ட பயணத்தில் கன்னியாகுமரி நோக்கி செல்கின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775744

 

******



(Release ID: 1775815) Visitor Counter : 168