வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெங்களூரு-மும்பை இடையேயான தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (BMIC) கீழ் கர்நாடகாவில் உள்ள தார்வாட் தொழிலக பிராந்திய அபிவிருத்தி

இடுகை இடப்பட்ட நாள்: 26 NOV 2021 1:00PM by PIB Chennai

பெங்களூரு-மும்பை இடையேயான தொழில்வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தார்வாட் முனையம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிராந்திய தொழிலக தொகுப்பிடங்களை உருவாக்கி மேம்படுத்தும் பணியை விரைவுபடுத்தி பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  பெங்களூரு-மும்பை தொழில்வழித்தட மேம்பாட்டுத் திட்டமானது கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் நன்கு திட்டமிடப்பட்ட போதுமான மூலவளங்கள் நிரம்பிய தொழிலக தளங்களை மேம்படுத்தும் பணிக்கு உதவிகள் அளிக்கும்.  தார்வாடில் திட்டமிடப்பட்டுள்ள தொழிலக அபிவிருத்தியானது தற்போதுள்ள தொழிலக மேம்பாட்டை மேம்படுத்துவதோடு பல்வேறு வகையான தொழில்களுக்கான முதலீட்டு இடமாகவும் இதனை மாற்றும்.

தொழில்வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணியின் குறிக்கோள் எதுவெனில் பசுமைக்கள ஸ்மார்ட் தொழிலக நகரங்களை உருவாக்குவதே ஆகும். உற்பத்திக்கான முதலீடுகள் நம் நாட்டில் செய்யப்படுவதற்கு உதவியாக நீடித்த, எளிதில் பயன்படுத்தக் கூடிய ஐசிடி சார்ந்த பயன்பாடுகளுடன் இந்த நகரங்கள் உருவாக்கப்படும். தொழிலகங்களுக்கான தரமான, நம்பகமான, நீடித்து நிலைத்திருக்கக் கூடிய மற்றும் தகவேற்புத் தன்மை கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் இவை உருவாக்கப்படும்.  நான்கு கட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய 32 செயல்திட்டங்களை உள்ளடக்கியதாக 11 தொழில்வழித்தட மேம்பாட்டுத் திட்டங்களை இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  ***************


(வெளியீட்டு அடையாள எண்: 1775429) வருகையாளர் எண்ணிக்கை : 265
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Telugu , Kannada