ஆயுஷ்
azadi ka amrit mahotsav g20-india-2023

முறைப்படுத்துவோர் மற்றும் ஏஎஸ்யு&எச் மருந்துகள் தயாரிப்பாளர்களுக்கு இமாசலப் பிரதேசத்தில் பயிற்சி அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Posted On: 26 NOV 2021 12:29PM by PIB Chennai

அமலாக்கத்தின் நடைமுறை அம்சங்கள் மற்றும் ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி (ஏஎஸ்யு&எச்) மருந்துகள் தயாரிப்பின் பிரச்சனைகளை முறைப்படுத்துவோரும் தயாரிப்பாளர்களும் நன்கு அறிந்துகொள்ள வியாழனன்று இரண்டு நாள் பயிற்சி அமர்வுக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

மூன்று மாத காலத்தில் இந்த அமைச்சகத்தின் மருந்துக் கொள்கைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து பயிற்சி அமர்வுகளில் இது முதலாவதாகும். வடக்கு மண்டலத்திற்கான இந்தப் பயிற்சி அமர்வு இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள மண்டல ஆயுர்வேத ஆராய்ச்சிக் கழகத்தில் நடைபெற்றது. இதில் இமாச்சல பிரதேசம்,உத்தரகண்ட், பஞ்சாப், சண்டிகர், லடாக், ஜம்மு காஷ்மீர், ஹரியானா ஆகியவற்றிலிருந்து 40 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள முறைப்படுத்தல் அம்சங்கள் ஜிஎம்பி, உலக சுகாதார அமைப்பின் ஜிஎம்பி, டிடிஎல், ஏஎஸ்யூ&ஹெச் மருந்துகள் பரிசோதனை, தொழில்துறை மற்றும் அரசு மருந்து கட்டுப்பாட்டு கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவை இந்தப் பயிற்சித் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மத்திய மாநில மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரின் ஒருங்கிணைந்த இந்த சந்திப்பு இருவழி கலந்துரையாடல் திட்டமாகும். தரமான ஆயுஷ் மருந்துகள் தயாரிப்பின் இலக்கை எட்டுவதற்கான பணியை ஊக்குவிப்பதாகவும் இது இருந்தது.

ஏஎஸ்யூ&ஹெச் மருந்து முறைப்படுத்துவோரிடையே முறைப்படுத்தல், ஏஎஸ்யு ஹெச் மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் ஒரு பொதுவான தளத்தில் சந்திப்பது ஆகியவை இந்த பயிற்சியின் நோக்கமாகும் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களின் ஆயுஷ் மருந்து முறைப்படுத்துவோர், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பிற துறையினர் இந்தப் பயிற்சி அமர்வில் தங்களின் பிரதிநிதிகளை நியமிக்கலாம்.

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் மற்றும் பல்வேறு தேசிய கல்விக் கழகங்களுடன் இணைந்து இந்த அமைச்சகத்தின் மருந்துக் கொள்கை பிரிவால் இந்தப் பயிற்சி அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

*********



(Release ID: 1775427) Visitor Counter : 154