நிலக்கரி அமைச்சகம்
மேற்கு வங்காளத்தின் புருலியா பகுதியில் உள்ள தொலைதூர கிராமங்களில் வாழ்க்கை முறையை கோல் இந்தியா லிமிடெட் மாற்றி வருகிறது
Posted On:
25 NOV 2021 4:41PM by PIB Chennai
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), அதன் நிலையான வளர்ச்சி இலக்குகளை மேலும் ஒருங்கிணைப்பதில் அமைதியாக ஈடுபட்டுள்ளது.
சிஐஎல் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இந்தியாவின் பல பின்தங்கிய மற்றும் தொலைதூர குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் உறுதியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவதில் முனைப்புடன் செயல்படுகின்றன.
சிஐஎல்லின் வலுவான துணை நிறுவனங்களில் ஒன்றான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (ஈசிஎல்), மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் சூரிய எரிசக்தி, பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் மற்றும் தரமான கல்வி வசதிகளை வழங்குவதில் சிஐஎல்லின் கரங்களை மேலும் வலுப்படுத்துகிறது.
“இப்போது 24x7 வெளிச்சம் இருப்பதால், என்னால் இரவிலும் படிக்க முடிகிறது. நான் முன்பை விட சிறந்த மதிப்பெண்கள் பெற்று வருகிறேன்,” என்று ரோஷ்னி ஹெம்ப்ரம் கூறுகிறார். மேற்கு வங்கத்தின் பின்தங்கிய புருலியா மாவட்டத்தில் நெடுரியா வட்டத்தில் உள்ள தொலைதூர கிராமங்களில் ஒன்றில் ஆசிரியராக ஆர்வமுள்ள 11-ம் வகுப்பு மாணவி தான் ரோஷ்னி.
அவருக்கான வாழ்க்கை மாறத் தொடங்கிவிட்டது, இப்போது அவர் 12-வது தேர்வில் சிறந்து விளங்கவும், தனது வாழ்வாதாரமாக கற்பிக்கும் வேலையைத் தொடங்கவும் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார்.
இதுபோல இன்னும் பல நேர்மறையான மாற்றங்களை சிஐஎல் மற்றும் அதன் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் செய்து வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1775036
****
(Release ID: 1775158)