தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
‘சுன்பத்’ உத்தராகண்டின் கிராமங்களில் ஏற்பட்ட நெருக்கடியால் இடம் பெயரும் பின்னணியில் அன்பும், நட்பும் உருவான ஒரு கதை:52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராகுல் ராவத்
எங்களைச் சுற்றியிருந்த அனைவரும் பிரிந்து சென்ற போது இயற்கையும், மலைகளும் இருந்தும்கூட எங்களால் தனிமையை உணர்ந்துதான் சுன்பத். விழாக்காலம் முடிந்தபின் வெறிச்சோடிக் காணப்படும் மைதானம் போன்ற வெறுமை அதில் இருக்கிறது. வேலைகளுக்காக நகரப்பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றதன் மூலம் உத்தராகண்டின் பல கிராமங்கள் உயிரோட்டமில்லாமல் வெறிச்சோடி கிடப்பதைக் காட்சிப்படுத்த இயக்குநர் ராகுல் ராவத் தமது சுன்பத் எனும் கார்வாலி திரைப்படத்தில் முயற்சி செய்திருக்கிறார்.
மாநிலம் முழுவதும் பலரைச் சந்தித்து நேர்காணல் நடத்தி் உண்மையான வாழ்க்கையின் உந்துதலால் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியதாக ராவத் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். திரைக்கலைஞர்கள் அடையாளம் காணப்பட்ட இருபது நாட்களுக்குள் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அவர் கூறினார்.
இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வீரு சிங் பாகல், இணை தயாரிப்பாளர் ரோஹித் ராவத் ஆகியோரும் தங்களின் அனுபவங்களைப் பிரதிநிதிகளுடனும், ஊடகவியலாளர்களுடனும் பகிர்ந்து கொண்டனர்.
கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின் இந்தியப் பிரிவில் கதையில்லா படமாக சுன்பத் திரையிடப்பட்டது. இத்தகைய விழாவில் உத்தராகண்டிலிருந்து முதன் முதலாக இடம் பெறும் திரைப்படம் சுன்பத் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774991
-----
(Release ID: 1774991)
(Release ID: 1775042)