தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

பொது இடங்களில் வை-பை வசதியை ஏற்படுத்த தொழில் முனைவோரை ஊக்குவித்து, கூடுதல் வருவாய் திரட்ட ஏதுவாக விதிமுறைகளில் மாற்றம் செய்து பிரதமரின்-வாணி திட்டம் அறிமுகம்


பிரதமரின்-வாணி திட்டம் குறித்து இணைய வழி கருத்தரங்கிற்கு தொலைத் தொடர்புத் துறை ஏற்பாடு

Posted On: 24 NOV 2021 3:11PM by PIB Chennai

பொது இடங்களில் வை-பை வசதியை ஏற்படுத்த தொழில் முனைவோரை ஊக்குவித்து, கூடுதல் வருவாய் திரட்ட ஏதுவாக, வை-பை வசதியை பெறுவதற்கான இடைமுக நடைமுறையான பிரதமரின் வாணி திட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மும்பை தொலைத் தொடர்புத் துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு அஜய் கமல் தெரிவித்துள்ளார். 

தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அதிகாரியான அவர், இன்று நடைபெற்ற இணைய வழிக் கருத்தரங்கில் உரையாற்றினார்.  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை அடைய குறைந்த கட்டணத்தில் அகன்ற கற்றை வசதி கிடைக்கச் செய்ய, பிரதமரின் வாணி திட்டம் பெருமளவு உதவுவதாக அவர் தமது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.  அகன்ற கற்றை இணைய தள சேவைகளின் பயன்பாட்டை நாடுமுழுவதும் வழங்கும் வகையில், பொது தரவு அலுவலகங்கள் மூலம் பொது இடங்களில் வை-பை சேவைகளை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமரின் வாணி திட்டம் தொலைத் தொடர்பு துறையால் தொடங்கப்பட்டது.

இன்று நடைபெற்ற கருத்தரங்கில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் நிறுவனமான பி பி என் எல் நிறுவனத்தின் அதிகாரிகள், மும்பை, தானே உள்ளிட்ட 7 மாவட்டங்களில் செயல்படும் பொது சேவை மையங்கள் மற்றும் அதன் கிராம அளவிலான 70 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். 

தொலைத் தொடர்பு துறையின் இயக்குநர் திரு சஞ்சய் சேத்தி பிரதமரின் வாணி திட்டம் குறித்து கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைத்தார்.

****



(Release ID: 1774781) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Marathi , Hindi