அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இமயமலை பனிப்பாறையின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் பனிப்பாறை-புவி ஓட்டு இடைவினையைப் புரிந்துகொள்ள உதவும்

Posted On: 23 NOV 2021 2:23PM by PIB Chennai

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள மேல் காளி கங்கை பள்ளத்தாக்கில் அதிகம் ஆராயப்படாத பகுதியில் உள்ள பெயரிடப்படாத பனிப்பாறையை ஆய்வு செய்து வரும் இந்திய ஆராய்ச்சியாளர்கள், பனிப்பாறையின் போக்கு திடீரென மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இமயமலைப் பனிப்பாறை ஒன்றின் போக்கில் இத்தகைய மாற்றம் ஏற்படுவது இதுவே முதல்முறையாகும், மேலும்பருவநிலை மற்றும் டெக்டோனிக்ஸ் எனப்படும் புவி ஓட்டின் ஒன்றுபட்ட தாக்கம் இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

இந்த பெயரிடப்படாத பனிப்பாறையின் அசாதாரண நடத்தை, பனிப்பாறை-புவி ஓட்டு இடைவினையைப் புரிந்துகொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள்  கருதுகின்றனர்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி விஞ்ஞானிகள் குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

 

தனித்துவமான பனிப்பாறை நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு 'ஜியோசயின்ஸ் ஜர்னலில்' வெளியிடப்பட்டுள்ளது.

 

பதிப்பு இணைப்பு- https://link.springer.com/article/10.1007/s12303-021-0030-6

 

மேலும் விவரங்களுக்கு, டாக்டர் மனீஷ் மேத்தாவை (7983614690) தொடர்பு கொள்ளவும்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1774211

******(Release ID: 1774394) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi , Bengali