மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நானோ தொழில்நுட்பம் மற்றும் இந்திய அறிவுசார் அமைப்புக்கான மையங்களை ஐஐடி கவுகாத்தியில் திரு தர்மேந்திர ப்ரதான் திறந்து வைத்தார்
Posted On:
21 NOV 2021 1:24PM by PIB Chennai
ஐஐடி கவுகாத்திக்கு இன்று சென்ற மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர ப்ரதான், நானோ தொழில்நுட்பத்திற்கான அதிநவீன மையம் (சிஎன்டி), இந்திய அறிவுசார் அமைப்புக்கான மையம் (சிஐகேஎஸ்) மற்றும் இரண்டு தங்கும் விடுதிகளை திறந்து வைத்தார்.
தேசிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்தல் குறித்த புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். அஸ்ஸாம் கல்வி அமைச்சர் டாக்டர் ரனோஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஓஜா ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தரவரிசை அமைப்புகளில் சிறந்த இடங்களை எட்டியதற்காக ஐஐடி கவுகாத்தியை பாராட்டினார், மேலும், ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான சூழலியல் அமைப்பை உருவாக்கி வடகிழக்கு பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஐஐடி கவுகாத்தியின் முயற்சிகளைப் பாராட்டினார்.
பேரிடர் மேலாண்மை, பல்லுயிர் அடிப்படையிலான ஆராய்ச்சி, பசுமை எரிசக்தி மேம்பாடு, அறிவு சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே தொழில் முனைதல் முன்னேற்றம் போன்ற துறைகளில் ஐஐடி கவுகாத்தி முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
தீர்வை மையமாகக் கொண்ட கண்டுபிடிப்புகளின் துடிப்பான சூழலியலை உருவாக்குவதற்காக தொழில்நுட்பம் மற்றும் அறிவை ஒருங்கிணைக்க இந்நிறுவனத்துடன் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகின் இந்த சகாப்தத்தில், பல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஐஐடி கவுகாத்தியில் உள்ள நானோ தொழில்நுட்பத்திற்கான மையம் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.
2020-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பட்டமளிப்பு விழா உரையில் இந்திய அறிவுசார் அமைப்புக்கான மையத்தை அமைக்க கவுகாத்தி ஐஐடி-க்கு பரிந்துரைத்ததாக அவர் மேலும் கூறினார். பழங்கால மற்றும் பாரம்பரிய இந்திய அறிவைப் பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும், பகிர்ந்து கொள்ளவும் விரைவாக இது நிறுவப்பட்டுள்ளது என்று அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1773699
*******
(Release ID: 1773740)