பிரதமர் அலுவலகம்

பிரதமர் நாட்டுக்கு வழங்கிய உரையின் தமிழாக்கம்

Posted On: 19 NOV 2021 11:22AM by PIB Chennai

வணக்கம் எனதருமை நாட்டு மக்களே!

 

இன்று தேவ்-தீபாவளி புனிதப் பண்டிகைஇன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புராப் புனித திருவிழாவும் ஆகும்இந்த புனிதத் திருநாளில் உலக மக்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு கர்தார்பூர் சாஹிப் வழித்தடமானது தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

நண்பர்களே,

 

'விச் துனியா செவ் கமியா தா தர்காஹ் பைசான் பையேஎன்று குருநானக் கூறியுள்ளார்.

 

 அதாவதுசேவையின் வழியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறதுஇத்தகைய சேவை மனப்பான்மையுடன் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் எங்கள் அரசு ஈடுபட்டுள்ளதுபல தலைமுறையினரின் கனவுகளை நனவாக்க இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

 

நண்பர்களே,

 

ஐம்பதாண்டு கால என் பொது வாழ்வில் விவசாயிகளின் பிரச்சனைகளை மிக நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன்அனுபவித்திருக்கிறேன்எனவே, 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்க நாடு எனக்கு வாய்ப்பளித்தபோது விவசாயத்தின் வளர்ச்சிக்கும்விவசாயிகளின் நலனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தோம்.

 

நண்பர்களே,

 

நாட்டில் 100-க்கு 80 விவசாயிகள் சிறு விவசாயிகள் என்ற உண்மை பலருக்குத் தெரியாதுஇவர்களுக்கு இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலமே உள்ளதுஇந்த சிறு விவசாயிகளின் எண்ணிக்கை 10 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதாஇந்த சிறிய நிலம்தான் அவர்களின் முழு வாழ்க்கைக்கும் ஆதாரம்இதுதான் அவர்களின் வாழ்க்கைஇந்த சிறிய நிலத்தின் உதவியுடன் அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்பரம்பரை பரம்பரையாக குடும்பங்கள் பிரிவது இந்த நிலத்தை சிறியதாக்கி வருகிறது.

 

எனவேநாட்டின் சிறு விவசாயிகளின் சவால்களை சமாளிக்க விதைகள்காப்பீடுசந்தைகள் மற்றும் சேமிப்புகளை வழங்குவதில் நாங்கள் முழுவதுமாக பணியாற்றியுள்ளோம்நல்ல தரமான விதைகளுடன்விவசாயிகளுக்கு வேம்பு பூசிய யூரியாமண் சுகாதார அட்டைகள்நுண்ணீர் பாசனம் போன்ற வசதிகளையும் அரசு வழங்கியுள்ளது. 22 கோடி மண் சுகாதார அட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்இதனால்இந்த அறிவியல் இயக்கத்தால் விவசாய உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

 

நண்பர்களே,

 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்அதிக விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்மேலும்பேரிடர் நேரத்தில் விவசாயிகள் எளிதாக இழப்பீடு பெறும் வகையில் பழைய விதிகளும் மாற்றப்பட்டனஇதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நமது விவசாய சகோதர சகோதரிகளுக்கு இழப்பீடு கிடைத்துள்ளதுசிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை விரிவுபடுத்தியுள்ளோம்சிறு விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, 1.62 லட்சம் கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

 

விவசாயிகளின் கடின உழைப்புக்கு ஈடாக விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனநாடு அதன் கிராமப்புற சந்தை உள்கட்டமைப்பை பலப்படுத்தியதுகுறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியதோடு மட்டுமின்றிசாதனை அளவில் அரசு கொள்முதல் மையங்களையும் உருவாக்கியுள்ளோம்எங்கள் அரசின் விளைபொருட்கள் கொள்முதல் கடந்த பல தசாப்தங்களின் சாதனைகளை முறியடித்துள்ளதுநாட்டின் 1,000-க்கும் மேற்பட்ட மண்டிகளை -நாம் (e-NAM) திட்டத்துடன் இணைப்பதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க ஒரு தளத்தை நாங்கள் வழங்கியுள்ளோம்இதோடுநாடு முழுவதும் உள்ள விவசாய மண்டிகளை நவீனப்படுத்தவும் பல கோடி ரூபாய் செலவழித்தோம்.

 

நண்பர்களே,

 

மத்திய அரசின் விவசாய பட்ஜெட் முன்பை விட இன்று ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதுஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறதுஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் கீழ்கிராமங்கள் மற்றும் பண்ணைகளுக்கு அருகில் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும்விவசாய உபகரணங்கள் விரைவாக கிடைக்கச் செய்வது போன்ற பல வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

சிறு விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 10,000 எஃப்பிஓ-க்களை (விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள்உருவாக்கும் நடவடிக்கையும் செயல்படுத்தப்பட்டு வருகிறதுஇதற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறதுநுண்ணீர் பாசன நிதி ஒதுக்கீடு இரண்டு மடங்காக, 10,000 கோடி ரூபாயாகஉயர்த்தப்பட்டுள்ளதுபயிர்க்கடனையும் இரட்டிப்பாக்கினோம்இந்த ஆண்டு ரூ 16 லட்சம் கோடியாக இது இருக்கும்மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகளும் கிசான் கடன் அட்டைகளின் பலனை இப்போது பெறத் தொடங்கியுள்ளனர்அதாவதுவிவசாயிகளின் நலனுக்காக நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறதுவிவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும்அவர்களின் சமூக நிலையை வலுப்படுத்தவும் நேர்மையாக செயல்பட்டு வருகிறது.

 

நண்பர்களே,

 

விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக மூன்று வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனநாட்டின் விவசாயிகள்குறிப்பாக சிறு விவசாயிகள்வலுவூட்டப்பட வேண்டும் என்பதும்அவர்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதும்அவர்களின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்க வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்ததுபல ஆண்டுகளாகஇந்த கோரிக்கையை நாட்டின் விவசாயிகள்விவசாய நிபுணர்கள்விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்கடந்த காலங்களிலும்பல அரசுகள் இது குறித்து விவாதித்தனஇம்முறையும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றதைத் தொடர்ந்து இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டனநாடு முழுவதும் உள்ள ஏராளமான விவசாயிகளும்பல விவசாய அமைப்புகளும் இதை வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்அவர்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் அவர்களுக்கு நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

 

நமது அரசு நல்ல நோக்கத்துடன்விவசாயிகளின் நலனுக்காகவும்குறிப்பாக சிறு விவசாயிகளுக்காகவும்விவசாயம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும்கிராமங்களில் உள்ள ஏழைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் முழு நேர்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்புடன் புதிய சட்டங்களை கொண்டு வந்ததுஆனால்நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும்முற்றிலும் தூய்மையானவிவசாயிகளின் நலனுக்கான இத்தகைய புனிதமான விஷயத்தை சில விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை.

 

விவசாயிகளில் ஒரு பகுதியினர் மட்டும் போராட்டம் நடத்தினாலும்அது எங்களுக்கு முக்கியமானதுவிவசாயப் பொருளாதார வல்லுநர்கள்விஞ்ஞானிகள்முற்போக்கு விவசாயிகள் ஆகியோரும் விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்களுக்குப் புரிய வைக்க கடுமையாக முயன்றனர்நாங்கள் மிகவும் பணிவுடன்திறந்த மனதுடன் அவர்களுக்கு விளக்கிக்கொண்டே இருந்தோம்தனிப்பட்ட மற்றும் குழு தொடர்புகள் பல்வேறு வழிகளில் தொடர்ந்தனவிவசாயிகளின் வாதங்களைப் புரிந்துகொள்ள நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்தோம்.

 

அவர்களுக்கு ஆட்சேபனைகள் இருந்த சட்ட விதிகளை மாற்றவும் அரசு ஒப்புக்கொண்டதுஇந்த சட்டங்களை இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் நாங்கள் முன்மொழிந்தோம்இதற்கிடையில்இந்த விவகாரம் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றதுஇந்த விஷயங்கள் அனைத்தும் நாட்டின் முன்னால் உள்ளனஎனவே நான் மேலும் விரிவாக செல்ல மாட்டேன்.

 

நண்பர்களே,

 

நாட்டுமக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அதே வேளையில்விவசாய சகோதரர்களுக்கு விளக்கின் வெளிச்சம் போல உண்மையை விளக்க முடியாமல் போனதற்கு எங்களது தவத்தில் ஏதோ குறை இருந்திருக்கலாம் என்பதை இன்று மனதார சொல்ல விரும்புகிறேன்.

 

இன்று குருநானக் தேவ் அவர்களின் பிரகாஷ் புரப் புனித விழாயாரையும் குறை சொல்லும் நேரம் இதுவல்லமூன்று விவசாய சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம் என்பதை இன்று முழு நாட்டிற்கும் நான் சொல்ல விரும்புகிறேன்இம்மாத இறுதியில் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான அரசியலமைப்புச் செயல்முறையை செய்து முடிப்போம்.

 

நண்பர்களே,

 

இன்று குரு பூரப் புனித நாள்எனவே நீங்கள் உங்கள் வீடுகள்வயல்வெளிகள் மற்றும் உங்கள் குடும்பங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எனது விவசாயத் தோழர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்புதிதாக ஆரம்பிப்போம்புதிய தொடக்கத்துடன் முன்னேறுவோம்.

 

நண்பர்களே

 

விவசாயத்துறை தொடர்பான மற்றுமொரு முக்கிய தீர்மானத்தை இன்று அரசாங்கம் எடுத்துள்ளதுஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் எனப்படும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும்நாட்டின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப பயிர் முறையை அறிவியல் பூர்வமாக மாற்றவும்குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகவும் பயனுள்ளதாகவும்வெளிப்படைத்தன்மையுடனும் ஆக்கவும் குழு ஒன்று அமைக்கப்படும்இந்தக் குழுவில் மத்திய அரசுமாநில அரசுகள்விவசாயிகள்வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயப் பொருளாதார நிபுணர்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.

 

நண்பர்களே

 

விவசாயிகளின் நலனுக்காக எங்கள் அரசு செயல்பட்டு வருகிறதுஅதை தொடர்ந்து செய்யும்குரு கோவிந்த் சிங் அவர்களின் உணர்வில் எனது உரையை முடிக்கிறேன்.

 

தே சிவா பாரு மோஹி இஹை சுப் கர்மன் தே கபூன்  தோரோ’.

 

 தேவிநற்செயல்களில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்காத இந்த வரத்தை எனக்கு வழங்குவாயாக.

 

நான் எதைச் செய்தேனோஅதை விவசாயிகளுக்காகச் செய்தேன்எதைச் செய்தாலும் நாட்டிற்காகச் செய்கிறேன்உங்கள் ஆசீர்வாதத்தால் முன்பு கூட எனது கடின உழைப்பில் எந்த குறையும் இல்லைஉங்கள் கனவுகள் நனவாகவும்நாட்டின் கனவுகள் நனவாகவும் நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என்று இன்று உறுதியளிக்கிறேன்.

 

உங்களுக்கு மிக்க நன்றிவணக்கம்!

 

குறிப்புபிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.

****



(Release ID: 1773333) Visitor Counter : 225