சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட்டில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள திரு.நிதின் கட்கரி அனுமதி
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2021 6:06PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தில், EPC (Engineering Procurement and Consgtruction) முறையில் தேசிய நெடுஞ்சாலை-334ஏ (புர்காஜி – லக்சர் -ஹரித்வார் சாலை)-யை ரூ.227.06 கோடி செலவில், நடைபாதையுடன் கூடிய இருவழிச் சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தும் திட்டத்திற்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், அம்மாநிலத்தில் மேலும் மூன்று திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை-330டி (சீதாபூர் முதல் குரைன் பகுதி வரை) ரூ.505 கோடி செலவில் அகலப்படுத்தி, வலுப்படுத்துவதற்கும் அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில், ஹரித்வாரிலிருந்து தில்லி – சஹாரான்பூர் – டேராடூன் பொருளாதார பெருவழித்தடத்தை ரூ.2095.21 கோடி செலவில், 6வழிச் சாலையாக மாற்றுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை -227ஏ(சிக்ரிகஞ்ச் அருகிலிருந்து பர்ஹாய்கஞ்ச் வரை) ரூ.403.36 கோடி செலவில் இருவழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1773083)
வருகையாளர் எண்ணிக்கை : 218