குடியரசுத் தலைவர் செயலகம்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் (பிஇசி) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர், பிஇசி போன்ற நிறுவனங்கள் நாட்டை கட்டமைப்பதாக புகழாரம்
प्रविष्टि तिथि:
16 NOV 2021 6:38PM by PIB Chennai
பஞ்சாப் பொறியியல் கல்லூரி (பிஇசி) போன்றவை வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, தேசத்தை கட்டியெழுப்பும் மையங்கள் என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறினார்.
சண்டிகரில் இன்று (நவம்பர் 16, 2021) நடைபெற்ற பிஇசி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிஇசி எப்போதும் உயர்ந்து விளங்குவதாக கூறினார். 1960-களின் முற்பகுதியில், நமது நாட்டுக்கு விமானவியல் பொறியாளர்களின் சேவை தேவை என்று உணர்ந்த இந்திய விமானப்படை பிஇசி-யை அணுகிய போது, மற்ற துறைகளிலிருந்த மாணவர்களை ஏரோநாட்டிக்கல் சிறப்புப் படிப்பின் இறுதியாண்டுக்கு மாற்றியதன் மூலம் அவசரத் தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட்டது.
பிஇசி-க்கு வரும் இளம் மாணவர்கள் திறமையானவர்களாகவும், புதுமைகளுக்கு தயாராகவும் இருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். கொவிட்-19 பெருந்தொற்றின் சவாலான காலங்களில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்குச் சென்று நோயாளிகளுக்கு உணவு, மருந்து மற்றும் பிற பொருட்களை வழங்கக்கூடிய ரோபோக்களை பிஇசி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சமுதாய சேவைக்கான புதுமையின் அற்புதமான எடுத்துக்காட்டு இது என்று கூறிய அவர், கொவிட் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த நிறுவனத்தில் இருந்து இரண்டு காப்புரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கண்மூடித்தனமான கற்றலை ஒதுக்கி வைத்துவிட்டு கல்வியில் ஆராய்ச்சி என்ற சிந்தனையை ஊக்குவிக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் இருக்கிறோம் என குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நமது புதிய தேசியக் கல்விக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதால், நம் அனைவருக்கும் வழிகாட்டும் வெளிச்சமாக திகழ்கிறது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772364
****
(रिलीज़ आईडी: 1772421)
आगंतुक पटल : 170