பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்லைப்புற சாலைகள் அமைப்புக்கு கின்னஸ் உலக சாதனையின் அங்கீகாரம்

Posted On: 16 NOV 2021 2:55PM by PIB Chennai

லடாக்கின் உம்லிங்கா கணவாயில் 19,024 அடி  உயரத்தில் உலகின் மிக உயரமான மோட்டார் வாகன சாலையை அமைத்து எல்லைப்புற சாலைகள் அமைப்பு சாதனை புரிந்ததற்காக கின்னஸ் உலக சாதனை சான்றிதழை 2021 நவம்பர் 14 ஆம் தேதி எல்லைப்புற சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜென்ரல் ராஜீவ் சவுத்திரி பெற்றுக் கொண்டார்.  காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனை சேர்ந்த  கின்னஸ் உலக சாதனை அமைப்பின் அதிகாரப்பூர்வ நடுவர் திரு ரிஷிநாத் இந்த அங்கீகாரத்தை வழங்கினார்.  உலகின் மிக உயரமான இந்த சாலையை நான்கு மாத காலம் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தச் சாலை, பொலிவியாவின் 18,953 அடி உயரத்தில் உள்ள உட்டுருங்கு  எரிமலையை இணைக்கும் சாலையின் சாதனையை முறியடித்துள்ளது. 

பாதுகாப்பு ரீதியில் மிக முக்கியமான இந்த சாலை எல்லைப் பகுதிகளில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு சான்றாக விளங்குகிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772280

****


(Release ID: 1772400) Visitor Counter : 248