சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதார அரங்கை தொடங்கி வைப்பதற்கான நிகழ்வில் தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டார் டாக்டர் மன்சுக் மாண்டவியா

Posted On: 16 NOV 2021 5:12PM by PIB Chennai

இந்தியாவில் தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சுகாதார அரங்கை தொடங்கி வைக்க சைக்கிள் பேரணி ஒன்றை மேற்கொண்டார். ஐ சி எம் ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, எப் எஸ் எஸ் ஏ ஐ தலைமை நிர்வாக அதிகாரி திரு அருண் சிங்கால் உட்பட  சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் அமைச்சருடன் சைக்கிளில் சென்றனர்.

பிரகதி மைதானத்தில் நடைபெறும் 40 ஆவது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அமைந்துள்ள சுகாதார அரங்கில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் தொற்றா நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். 

சுகாதார அரங்கு துவக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒருமாத கால இயக்கத்தை அறிவித்தார்.

இந்த ஒரு மாத கால இயக்கத்தின் போது,  நாடுமுழுவதும் ஆயுஷ்மான் பாரத் நலவாழ்வு மையங்கள் மூலம் 7.5 லட்சம் நலவாழ்வு அமர்வுகள் மற்றும் 75 லட்சம் என்சிடி பரிசோதனைகளை நடத்த நமக்கு நாமே இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கோவிட் 19 நாடுதழுவிய தடுப்பூசி இயக்கம் பற்றி பேசிய அமைச்சர், “மாண்புமிகு பிரதமரின் வழிகாட்டுதல்களின் கீழ் ஜன்பாகிதாரி கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.  ஒவ்வொரு மாவட்டமும் சுகாதார உள்கட்டமைப்புடன் வலுப்பெறும் நோக்கத்துடன் மத்திய அரசு ரூ.64,000 கோடியை அனுமதித்துள்ளதாக அவர்  தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சை வழங்குவதில் தனியார் துறையின் ஒத்துழைப்பு குறித்து தெரிவித்த மத்திய சுகாதார அமைச்சர், போட்டி என்பது இருந்தால் குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1772326

****


(Release ID: 1772396) Visitor Counter : 376


Read this release in: English , Urdu , Hindi