குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
40-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2021-ல் “எம்எஸ்எம்ஈ அரங்கை” திரு நாராயண் ரானே தொடங்கிவைத்தார்
प्रविष्टि तिथि:
15 NOV 2021 3:28PM by PIB Chennai
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்ஈ) அமைச்சர் திரு நாராயண் டாட்டு ரானே 40-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2021-ல் “எம்எஸ்எம்ஈ அரங்கை” புதுதில்லியில் இன்று மத்திய எம்எஸ்எம்ஈ இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா முன்னிலையில் திறந்து வைத்தார். புதுதில்லி பிரகதி மைதானத்தில் 7-எஃப்ஜிஎச் அரங்கில் இது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ரானே, இந்தக் கண்காட்சி எம்எஸ்எம்ஈ தொழில் முனைவோருக்கு குறிப்பாக பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு வாய்ப்புகளை வழங்கும் என்று கூறினார். மத்திய அரசின் இணக்கமான தொழில் கொள்கை, எம்எஸ்எம்ஈ அமைச்சகம் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள், இப்பிரிவில் தொழில்முனைவோர் தங்களது முழு ஆற்றலையும் செலுத்தி பிரதமரின் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்னும் பெரிய தொலை நோக்கை அடைய வழி வகுக்குமென்று அவர் கூறினார்.
எம்எஸ்எம்ஈ அரங்கை பார்வையிட்ட தரு ரானே கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள எம்எஸ்எம்ஈ தொழில்முனைவோரை சந்தித்தார். மொத்தம் 316 எம்எஸ்எம்ஈ பிரிவினர், ஆயுஷ், செராமிக்ஸ், ரசாயனம், அழகு சாதனப் பொருட்கள், மின்சாரம் மற்றும் மின்னனு சாதனங்கள், பின்னல் வேலை, உணவு, காலணி, கைவினைப்பொருட்கள், கைத்தறி, வீட்டு அலங்காரம், தேன், சணல், தோல், வைரம் மற்றும் ஆபரணங்கள், ஜவுளி, பொம்மைகள், மரம் போன்ற சுமார் 20 துறைகளில் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிபடுத்தியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771932
********
(रिलीज़ आईडी: 1772080)
आगंतुक पटल : 567