நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
விடுதலையின் அமிர்த மகோத்சவத்தை உணவு மற்றும் பொது விநியோகத் துறை கொண்டாடியது
प्रविष्टि तिथि:
15 NOV 2021 4:48PM by PIB Chennai
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் எற்பாடு செய்யப்படும் விடுதலையின் அமிர்த மகோத்சவம், 75 ஆண்டுகால முற்போக்கு இந்தியா மற்றும் அதன் புகழ்பெற்ற வரலாற்றின் கொண்டாட்டம் இன்று தொடங்கியது.
கொண்டாட்டத்தின் முதல் நாளன்று, பொது விநியோக அமைப்பின் சீர்திருத்தங்களில் நீண்டகால பங்குதாரரான ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து, ‘உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொது விநியோக அமைப்பின் சீர்திருத்தங்களில் இந்தியாவின் பயணம்’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
உயர்மட்ட வல்லுநர்கள் இதில் பங்கேற்று, இந்தியாவில் தொழில்நுட்ப அடிப்படையிலான பொது விநியோக அமைப்பு சீர்திருத்தங்கள், கொவிட்-19 நெருக்கடியின் போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் அனுபவம், உணவு வீணாகுதல் மற்றும் சேமிப்பு இழப்புகளை நிவர்த்தி செய்வதற்கான விநியோகச் சங்கிலி சீர்திருத்தங்கள், புதுமைகள், செயல்பாட்டு ஆராய்ச்சியின் பங்கு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.
"70-களின் பிற்பகுதி மற்றும் 80-களில், பொது விநியோகம் கிராமப்புறங்களுக்கு விரிவடைந்ததது. அதைத் தொடர்ந்து 1997-ல் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக அமைப்பு தொடங்கப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் எனும் மைல்கல் 2016-ல் செயல்படுத்தப்பட்டது," என்று உணவு மற்றும் பொது விநியோக துறை இணை செயலாளர் திரு எஸ் ஜெகன்நாதன் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் இந்தியா இயக்குநர் பிஷோ பராஜூலி, ‘கொவிட்-19 நெருக்கடியின் போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியாவின் அனுபவம்’ பற்றிப் பேசினார். பெருந்தொற்றுக்கான இந்தியாவின் எதிர்வினையை சுகாதாரப் பாதுகாப்பின் அடிப்படையில் மட்டுமில்லாமல், பொது விநியோகத் துறையிலும் அவர் பாராட்டினார்.
இந்திய உணவு கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அதிஷ் சந்திரா, பேசுகையில், உணவு விரயம் மற்றும் சேமிப்பு இழப்புகளை மேலும் நிவர்த்தி செய்வதற்கான விநியோகச் சங்கிலி சீர்திருத்தங்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771990
***********
(रिलीज़ आईडी: 1772077)
आगंतुक पटल : 214