ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயணிகள் சேவைகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவர ரயில்வே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது


ரயில்வே பயணிகள் முன்பதிவு முறை (பிஆர்எஸ்) அடுத்த 7 நாட்களுக்கு இரவில் நெரிசலற்ற நேரத்தில் மூடப்படும்

புதிய ரயில் எண்கள், தரவு முறையை மேம்படுத்த இது வகை செய்யும்

Posted On: 14 NOV 2021 4:58PM by PIB Chennai

கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய அளவில், பயணிகள் சேவைகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவர ரயில்வே மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக, ரயில்வே பயணிகள் முன்பதிவு முறை (பிஆர்எஸ்) அடுத்த ஏழு நாட்களுக்கு இரவு நேரத்தில் நெரிசலற்ற 6 மணி நேரத்துக்கு மூடப்படும். புதிய ரயில் எண்களை பதிவு செய்யவும், தரவு முறையை மேம்படுத்தவும் இது வழி வகுக்கும். அதிக அளவிலான, கடந்த கால ( பழைய ரயில் எண்கள்),தற்போதைய பயணிகள் பதிவு தரவுகளை அனைத்து மெயில்/துரித ரயில்களில் பதிவு ஏற்றி மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதால், இதைக் கவனமாக செம்மைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணச்சீட்டு சேவை

யில் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் இரவு நேரங்களில் இது அமல்படுத்தப்படவுள்ளது.

நவம்பர் 14-15 முதல் நவம்பர் 20-21 வரை 23;30 மணியில் இருந்து 05;30 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த 6 மணி நேரத்தில் ( 23;30 முதல் 05;30 மணி வரை) எந்தவித பிஆர்எஸ் சேவையும் ( பயணச்சீட்டு முன்பதிவு, நடப்பு பதிவு, ரத்து செய்தல், விசாரணை உள்ளிட்டவை) கிடைக்காது.

 

இந்த நேரத்தில் புறப்படும் , ரயில்களுக்கான பயணிகள் பெயர் உள்ளிட்ட விவரங்களை ரயில்வே பணியாளர்கள் முன்கூட்டியே அறிவிப்பார்கள். பிஆர்எஸ் சேவை தவிர, 139 சேவை உள்ளிட்ட இதர அனைத்து சேவைகளும் தடையின்றி தொடரும்.

 

பயணிகள் சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மேம்படுத்தும் முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

••••


(Release ID: 1771748) Visitor Counter : 262