நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லி மண்டலத்தின் சரக்கு பெட்டக கிடங்குகளில் வாரத்தின் 7 நாட்களிலும், சரக்குகள் வெளியேற சுங்கத்துறை அனுமதிக்கும் திட்டம் தொடக்கம்

Posted On: 14 NOV 2021 4:42PM by PIB Chennai

தில்லி மண்டலத்தில் உள்ள கர்ஹி கர்சரு, சரக்கு பெட்டக கிடங்கில், வாரத்தின் 7 நாட்களிலும் சரக்கு பெட்டகங்களை வெளியேற்றுவதற்கு சுங்கத்துறை ஒப்புதல் வழங்கும் பணியை தில்லி மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் திரு சுர்ஜித் புஜாபல் தொடங்கி வைத்தார். சோனேபட், துக்ளகாபாத் ஆகிய சரக்கு பெட்டக கிடங்குகளிலும் ஞாயிற்று கிழமை மற்றும் பொது விடுமுறைகளில் தில்லி சுங்கத்துறை பணியாற்றும்.

 

இந்நிகழ்ச்சியில் மாருதி சுசுகி, ஜிந்தால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல், ஹோண்டா, ஏஷியன் பெயின்ட்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய சுங்கத்துறை தலைமை ஆணையர் திரு சுர்ஜித் புஜாபல், சோனேபட், கர்ஹி கர்சரு மற்றும் துக்ளகாபாத் ஆகிய 3 உள்நாட்டு சரக்கு பெட்டக கிடங்குகளிலும், வாரத்தின் 7 நாட்களும் சரக்குகள் வெளியேற ஒப்புதல் வழங்கும் பணியை மேற்கொள்ள தில்லி சுங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது’’ என்றார்.  இந்த வசதியை ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும்  பயன்படுத்திக் கொள்வர் என எதிர்பார்ப்பதாகவும், இதன் மூலம் சரக்குகள் விரைவாக வெளியேறும் என்றும் அவர் கூறினார். 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771652

****


(Release ID: 1771744) Visitor Counter : 213


Read this release in: English , Urdu , Hindi , Telugu