பாதுகாப்பு அமைச்சகம்
‘ஃபோர்ஸ் இன் ஸ்டேட்கிராப்ஃட்’ புத்தகம்: பாதுகாப்புத்துறைச் செயலாளர் வெளியீடு
Posted On:
13 NOV 2021 12:14PM by PIB Chennai
‘ஃபோர்ஸ் இன் ஸ்டேட்கிராப்ஃட்’ என்ற புத்தகத்தை பாதுகாப்புத்துறைச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் வெளியிட்டார். இந்த புத்தகத்தை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கமாண்டன்ட், ஏர் மார்ஷல் திப்தேந்து சவுத்திரி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் டாக்டர் அர்ஜூன் சுப்பிரமணியன்(ஓய்வு) ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் புத்தகத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மோதல் பிரச்சனை, வான் சக்தி, அணு ஆயுத சக்தி போன்ற இந்திய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்டுரைகளை எழுதியவர்கள், பாதுகாப்புப் படையின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள்.
இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை செயலாளர், குறுகிய காலத்தில் இந்த புத்தகத்தை எழுதி வெளியிட்ட அனைத்து அதிகாரிகளையும் பாராட்டினார். இதேபோல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் பயிற்சி மையங்களில் உள்ள சிந்தனையாளர்கள் நிர்வாகக் கலைக் குறித்தப் புத்தகங்களை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
************
(Release ID: 1771472)
Visitor Counter : 222