குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்

Posted On: 13 NOV 2021 1:16PM by PIB Chennai

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு தர தனியார் நிறுவனங்கள்  முன்வர வேண்டும் என  குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர பிரதேசம் நெல்லூரில், மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான மையத்தின் (சிஆர்சி) ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இன்று கலந்துரையாடிய குடியரசுத் துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினால், அவர்களால் எந்த துறையிலும் சிறந்து விளங்க முடியும். டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்திய உறுதி மற்றும் கடின உழைப்பு கோடிக்கணக்கான ஊழியர்களை ஊக்குவித்தது. மன உறுதி மூலம், எந்தவித குறைபாட்டையும் மிஞ்ச முடியும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளின் தடையற்ற பயணத்துக்கு, அவர்களுக்கு உகந்த பொது கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திறன்மேம்பாட்டு பயிற்சி மூலம் மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் சிஆர்சி-யின் பணி பாராட்டத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியார் துறை முன்வர வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிளுக்கு  உதவி பொருட்களையும் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771414

*****



(Release ID: 1771434) Visitor Counter : 184


Read this release in: English , Urdu , Hindi , Punjabi