தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

காலமுறை மற்றும் வருடாந்திர திட்டங்களுக்காக தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸுடன் கைகோர்த்துள்ளது

Posted On: 11 NOV 2021 5:58PM by PIB Chennai

காலமுறை மற்றும் வருடாந்திர (டெர்ம் & ஆன்யுட்டி) திட்டங்களுக்காக தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸுடனான கூட்டணியை இன்று அறிவித்தது.

நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள வங்கியின் 650 கிளைகள் மற்றும் 136,000 வங்கி சேவை மையங்கள் வாயிலாக இந்த திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் மற்றும் வங்கிகள் இல்லாத மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள், நிதி ரீதியாக பாதுகாப்பாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் ஆவதற்கு இந்த கூட்டணி உதவும், மேலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் இது விளங்குகிறது.

புதிய கூட்டணி குறித்து தபால் துறையின் செயலாளர் திரு வினீத் பாண்டே கூறுகையில், “காப்பீடு மற்றும் பிற நிதி சேவைகளை எளிதில் அணுக முடியாத பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த கூட்டின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி இலக்குகளை எளிதில் அடைய இயலும்,” என்றார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு ஜே வெங்கட்ராமு கூறுகையில், “நிதி பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகளை சந்திக்க வேண்டியதன் அவசியத்தால், ஆயுள் காப்பீடு குறிப்பிடத்தக்க முதலீட்டு கருவியாக சமீப காலங்களில் உருவெடுத்துள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி ஏற்கனவே தனது வாடிக்கையாளர்களுக்கு பிரதமரின் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது, சமூக பாதுகாப்பு அனைவருக்கும் வழங்குதல் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு காப்பீட்டை எட்ட செய்யும் அரசின் நோக்கத்துடன் இது ஒத்துப்போகிறது. இந்த டெர்ம் மற்றும் ஆன்யூட்டி திட்டங்களுடன், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் உடனான எங்களின் வெற்றிகரமான உறவு மேலும் விரிவடைந்துள்ளது,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1771000

----



(Release ID: 1771055) Visitor Counter : 182


Read this release in: English , Urdu , Hindi