அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

அறிவியல் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக 33 அமைச்சகங்கள்/துறைகளிடமிருந்து 134 முன்மொழிவுகள்/தேவைகள் பெறப்பட்டன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 10 NOV 2021 4:19PM by PIB Chennai

அறிவியல் பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளுக்காக 33  அமைச்சகங்கள்/துறைகளிடமிருந்து 134 முன்மொழிவுகள்/தேவைகள் பெறப்பட்டன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார். இதற்கான ஒருங்கிணைப்பை சிஎஸ்ஐஆர் செய்திருந்தது.

 

இன்று நடைபெற்ற அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மூன்றாவது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், துறைகளுக்கான பல்வேறு அறிவியல் பயன்பாடுகளைப் உபயோகப்படுத்துவதற்காக செப்டம்பரில் தொடங்கப்பட்ட முன்முயற்சியின் விளைவாக இரண்டு மாதங்களுக்குள் அமைச்சகங்களிடமிருந்து இவ்வளவு பெரிய அளவிலான பரிந்துரைகள் பெறப்பட்டதற்கு திருப்தி தெரிவித்தார்.

 

விவசாயம், உணவு, கல்வி, திறன் மேம்பாடு, ரயில்வே, சாலைகள், ஜல் சக்தி, மின்சாரம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகள் இதில் அடங்கும். இன்று ஒவ்வொரு துறையும் அறிவியல் தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியிருப்பதை இது காட்டுகிறது என்றார் அவர்.

 

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், அணுசக்தி, விண்வெளி/இஸ்ரோ, சிஎஸ்ஐஆர் மற்றும் பயோடெக்னாலஜி உள்ளிட்ட அனைத்து அறிவியல் அமைச்சகங்களின் பிரதிநிதிகள் தனித்தனியாக ஒவ்வொரு அமைச்சகத்துடனும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இந்த புதிய முயற்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த ஆண்டு செப்டம்பர் நடுப்பகுதியில் தொடங்கினார்.

இந்திய அரசில் உள்ள பல்வேறு அமைச்சகங்கள் எந்தெந்த துறைகளில் என்னென்ன அறிவியல் பயன்பாடுகளைப் உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பிட்ட அமைச்சக அடிப்படையிலான அல்லது துறை சார்ந்த திட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த கருப்பொருள் அடிப்படையிலான திட்டங்களின் அவசியத்தை அமைச்சர் அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.

 

இந்த வித்தியாசமான யோசனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பரிந்துரைத்தார் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் அறிவியலின் மீது இயற்கையான விருப்பம் கொண்டவர் மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை ஆதரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் சிறந்தவர் என்றார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770537

 

****(Release ID: 1770716) Visitor Counter : 45


Read this release in: English , Urdu , Hindi , Telugu