பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை தளபதிகள் மாநாடு நவம்பர் 2021

Posted On: 10 NOV 2021 4:01PM by PIB Chennai

வருடம் இருமுறை நடைபெறும் விமானப்படை தளபதிகள் மாநாடு பாதுகாப்பு அமைச்சரால் 2021 நவம்பர் 10 அன்று விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்) தொடங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பாதுகாப்பு செயலாளர் திரு ராஜ் குமார் ஆகியோரை விமானப்படைத் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சௌதரி வரவேற்றார். இந்திய விமானப்படை தளபதிகளை அமைச்சருக்கு அவர் அறிமுகப்படுத்தினார்.

மாநாட்டின் தொடக்க நாளில் விமானப்படை தளபதிகளிடம் உரையாடிய அமைச்சர், உயர்மட்ட ஆயத்த நிலை, குறுகிய அவகாசத்தில் பதிலளிக்கும் திறன் மற்றும் செயல்பாட்டு மற்றும் அமைதி நேரப் பணிகளைச் செய்வதில் உயர்தர நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக இந்திய விமானப்படையை பாராட்டினார்.

"நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்தல்" என்ற மாநாட்டின் கருப்பொருளை சார்ந்து சாத்தியமான தீர்வுகளை உருவாக்க ஆலோசனைகளை நடத்துமாறு தளபதிகளை அவர் அறிவுறுத்தினார்.

அனைத்து தளபதிகளிடமும் உரையாடிய விமானப்படை தலைவர், நமது எதிரிகளின் எந்தவொரு தவறான செயலுக்கும் விரைவான மற்றும் பொருத்தமான பதிலை வழங்குவதற்காக பல்-முனை திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

2021 நவம்பர் 10 முதல் 12 வரை தளபதிகள் மாநாடு நடத்தப்படுகிறது. ஆயுதப் படைகளுக்கு பயிற்சியளிப்பது, தயார்படுத்துவது மற்றும் விரைவான மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதை புவிசார்-அரசியல் நிலப்பரப்பில் உள்ள நிச்சயமற்ற தன்மை இன்றியமையாததாக ஆக்குகிறது.

தேசிய பாதுகாப்பை பாதிக்கக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றி மாநாட்டின் போது ​​தளபதிகள் விவாதித்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்கள். பயிற்சியை வலுப்படுத்துதல் மற்றும் மனிதவளத்தை திறம்பட பயன்படுத்துவதற்கு மனிதவளக் கொள்கைகளை மேம்படுத்துதல் தொடர்பான விஷயங்களும் விவாதிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770535

****


(Release ID: 1770706) Visitor Counter : 232


Read this release in: English , Urdu , Hindi , Malayalam