ஜல்சக்தி அமைச்சகம்

கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சூரிய சக்தி பயன்பாடு குறித்து 18,000 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கர்நாடகா பயிற்சி அளிக்க உள்ளது

Posted On: 09 NOV 2021 12:14PM by PIB Chennai

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, ஊரக குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து 18,000 கிராமப்புற பெண்களுக்கு மகாத்மா காந்தி ஊரக ஆற்றல் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சூரிய சக்தி பயன்பாடு போன்ற பல்வேறு அம்சங்களில் கர்நாடகாவின் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினசரி கழிவு சேகரிப்பு, கழிவுகளை பிரித்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்காக இந்த பெண்கள் தங்கள் உள்ளூர் கிராம பஞ்சாயத்துகளால் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஸ்வச்ச சங்கீர்னாவை ஒரு வணிக முறையாக திறம்பட நிர்வகித்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பிரிவைத் தன்னிறைவாக ஆக்குதல் ஆகியவற்றின் மூலம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு நிதி ஆதாரங்களுக்கான அறிவு மற்றும் திறன்களை வழங்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

இது குறித்து திரு பரமேஸ்வர் ஹெக்டே (இயக்குநர் ஐஎஸ்ஏ, ஆர் டி டபுள்யூ எஸ் டி) கூறுகையில், இந்த நிதியாண்டில் அனைத்து 30 மாவட்டங்களிலும் வழங்கப்படும் வகுப்பறைப் பயிற்சியால் 18,000 கிராமப்புறப் பெண்கள் பயனடைவார்கள், அவர்களுக்கு மாற்று வருமானம் கிடைக்கும் என்றார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், திடக்கழிவு மேலாண்மை, ஈரக் கழிவுகளில் இருந்து பல்வேறு உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், மக்கும் கழிவுகளை நிர்வகிப்பதற்கான பயோ கேஸ், மாதவிடாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் மேலாண்மை ஆகியவற்றை குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயிற்சிக்குப் பிறகு அறிந்துகொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு, கீழ்காணும் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770233 

----



(Release ID: 1770348) Visitor Counter : 233