பாதுகாப்பு அமைச்சகம்

கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டம் கோவாவில் நடைபெற்றது

Posted On: 08 NOV 2021 7:24PM by PIB Chennai

கோவா கடல்சார் கூட்டம் - 2021-ன் மூன்றாவது பதிப்பை 2021 நவம்பர் 7 முதல் 9 வரை கோவாவில் உள்ள கடற்படை போர் கல்லூரியின் கீழ் இந்திய கடற்படை நடத்தியது.

"கடல்சார் பாதுகாப்பு மற்றும் பெருகிவரும் புதுவகை அச்சுறுத்தல்கள்: இந்திய பெருங்கடல் நாடுகளின் கடற்படைகளின் துடிப்பான பங்களிப்பு குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் இந்தாண்டின் கூட்டம் நடைபெற்றது.

வங்கதேசம், கமொரோஸ், இந்தோனேசியா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீசியஸ், மியான்மர், செஷில்ஸ், சிங்கப்பூர் இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 12 இந்திய பெருங்கடல் நாடுகளைச் சேர்ந்த கடற்படைகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

வரவேற்புரை வழங்கிய தெற்கு கடற்படைப் பிரிவின் தளபதி வைஸ் அட்மிரல் ஏ கே சாவ்லா, கடல்சார் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இந்திய கடற்படையில் உறுதி குறித்து எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் கடல்சார் லட்சியமான சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவூட்டிய அவர், கோவா கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனைகள் புதுவகை அச்சுறுத்தல்கள் குறித்த புரிதல்களை பகிர்ந்து கொள்ள உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் திரு அஜய் குமார், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆக்கப்பூர்வ செயல்பாட்டின் அடையாளமாக கோவா கடல்சார் கூட்டம் திகழ்வதாக கூறினார். கடல்சார் பாதுகாப்பு பொருளாதார வளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று கூறிய அவர், இவை இரண்டையும் வலுப்படுத்த இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.

சிறப்புரையாற்றிய வெளியுறவு செயலாளர் திரு ஹர்ஷ்வர்தன் ஷிரிங்க்லா, சாகர் குறித்த இந்தியாவின் லட்சியம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்த அதன் அணுகுமுறை குறித்து பேசினார். நீல பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக கடல்சார் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து விளங்குவதாகவும் இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1770089

****



(Release ID: 1770118) Visitor Counter : 301


Read this release in: English , Urdu , Hindi , Marathi