சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
‘‘பிரஜ் ராஜ் உத்சவ்’’ மற்றும் ‘‘கைவினைப் பொருள் கண்காட்சி’’, கவுசல் குபேர் கும்ப நிகழ்ச்சிகள்: மதுரா விருந்தாவனில் உ.பி. முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் 10ம் தேதி தொடங்கி வைக்கிறார்
Posted On:
08 NOV 2021 3:01PM by PIB Chennai
‘‘பிரஜ் ராஜ் உத்சவ்’’ மற்றும் ‘‘கைவினைப் பொருள் கண்காட்சி’’, கவுசல் குபேர் கும்ப நிகழ்ச்சிகளை மதுரா விருந்தாவனில் உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
மதுரா விருந்தாவனில் நடைபெறும் 31வது கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்க விழாவில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி, எம்.பி திருமதி ஹேமா மாலினி, உத்தரப் பிரதேச பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷத் துணைத் தலைவர் திரு சைல்ஜா காந்த் மிஸ்ரா உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
பல நூற்றாண்டு பாரம்பரியம் உள்ள நம் முன்னோர்கள் கலை, மற்றும் இந்திய கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பது, பாதுகாப்பது மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதில் ‘ஹூனார் ஹாத்’ எனப்படும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மிகச் சிறந்த தளம். இது உள்நாட்டு பொருட்களுக்கு ஆதரவளிப்போம் என்ற சுதேசி பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது. உள்நாட்டு கலைஞர்கர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் பொருளாதார மேம்பாட்டையும் இந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி உறுதி செய்துள்ளது.
புகழ்பெற்ற பிரஜ் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, பிரஜ் தீர்த் விகாஸ் பரிஷத் அமைப்பு, 10 நாள் பிரஜ் ராஜ் மகோத்ஸவத்தை விருந்தாவனில் நவம்பர் 10ம் தேதியிலிருந்து நடத்துகிறது.
அடுத்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி தில்லி பிரகதி மைதானத்தில் நவம்பர் 14ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தப்படும். புதுதில்லியில் 2021 டிசம்பர் 22ம் தேதி முதல் 2022 ஜனவரி 2ம் தேதி வரை நடத்தப்படும்.
வரும் நாட்களில் மைசூர், ஐதராபாத், புனே, அகமதாபாத், புதுச்சேரி,மும்பை, ஆக்ரா, ஸ்ரீநகர் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1770012
****
(Release ID: 1770028)
Visitor Counter : 208