எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்தியாவில் எரிசக்தி தேவை பெருமளவில் அதிகரித்து வருவதால் என்டிபிசி தொடர்ந்து வளர்ச்சியடைவது அவசியம்; மின்சாரத் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங்

Posted On: 07 NOV 2021 6:31PM by PIB Chennai

‘’தேசிய அனல் மின் கழகம் என்டிபிசி, நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான மின்சாரத்தை அதிக அளவில்  வழங்கும் சிறப்பு வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது’’ என்று மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் இன்று கூறினார். என்டிபிசி நிறுவன தினத்தையொட்டி திரு சிங் உரையாற்றினார். நிறுவனத்தின் சாதனைகள், நிபுணத்துவம், எதிர்கால இலக்குகள் குறித்தும், இந்தியாவின் மின்தேவையைப் பூர்த்தி செய்வதில் நிறுவனத்தின் பங்கு பற்றியும்  திரு சிங் தமது உரையில் விளக்கினார். கடந்த நிதியாண்டில், மாநிலங்களின் மின்தேவையை சுமார் 4500 கோடி ரூபாய் அளவுக்கு  அளித்துள்ளதற்காக  என்டிபிசி நிறுவனத்தைப் பாராட்டினார். 

என்டிபிசி தேசிய நிறுவனம் என்ற அளவைத் தாண்டி, மின் துறையில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து, சர்வதேச நிறுவனமாக மாற தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று திரு.சிங் வலியுறுத்தினார். நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு ஏற்ப, என்டிபிசி வளர்ச்சி அடைய வேண்டியது அவசியம் என்று தமது உரையில் அவர் அறிவுறுத்தினார். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரு பில்லியன் யூனிட் மின்சாரத்தை தயாரிக்கும் என்டிபிசியின் மகத்தான சாதனையை அவர் சுட்டிக்காட்டினார்.

சிறப்பாக செயல்பட்டு வரும் என்டிபிசி மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஸ்வர்ண சக்தி விருதுகளையும்,திட்ட மேலாண்மை விருதுகளையும் திரு ஆர்.கே.சிங் வழங்கினார். ஷ்ரம் கவுசல் இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

என்டிபிசி நிறுவன தினம் நொய்டாவில் உள்ள பொறியியல் அலுவலக வளாகத்தில் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், என்டிபிசி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு குர்தீப் சிங், மின்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலரும், நிதி ஆலோசகருமான திரு ஆசிஷ் உபாத்யாயா, கூடுதல் செயலர் திரு விவேக் தேவாங்கன், என்டிபிசி இயக்குநர்கள்  மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

------ 



(Release ID: 1769891) Visitor Counter : 250