பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை மேற்கு கட்டுப்பாட்டு மைய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் பொறுப்பேற்பு
Posted On:
07 NOV 2021 2:20PM by PIB Chennai
கடற்படையின் மேற்கு கட்டுப்பாட்டு மைய தளபதியாக வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் கடந்த 4ம் தேதி பொறுப்பேற்றார்.
இந்திய கடற்படையில், கடந்த 1987ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சேர்ந்த வைஸ் அட்மிரல் சுவாமிநாதன் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர்முறையில் நிபுணர். கதக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள கடற்படை பயிற்சி மையங்களில் இவர் பயிற்சி பெற்றவர்.
அதி விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற இவர், தனது கடற்படை பணியில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.
தற்போதைய பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, கடல்சார் பாதுகாப்பு ஆலோசனை குழு மற்றும் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் இவர் தலைமை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769847
***
(Release ID: 1769874)
Visitor Counter : 238