சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

வரைவு மத்தியஸ்த மசோதா மக்கள் கருத்து கேட்புக்காக வெளியீடு

Posted On: 05 NOV 2021 4:11PM by PIB Chennai

பாரம்பரிய நீதிமன்ற அமைப்புகளுக்கு வெளியே பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்காக தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் மாற்று தாவா தீர்வு (ஏடிஆர்) வழிமுறைகளை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கான பல்வேறு கொள்கை முன்முயற்சிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.

இவற்றின் தொடர்ச்சியாக, மத்தியஸ்தம் தொடர்பான தனி சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மத்தியஸ்தம் தொடர்பான பல்வேறு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சட்டங்களில் உள்ளதால், மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய சட்டப்பூர்வ கட்டமைப்பை உறுதிப்படுத்துவதும், தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்கள் உள்ளிட்ட ஒரு முதன்மை சட்டத்தை கொண்டு வருவதும் அவசியம் என உணரப்பட்டது.

'சமரசம்' மற்றும் 'மத்தியஸ்தம்' ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தும் சர்வதேச நடைமுறையை இந்த மசோதா கருத்தில் கொள்கிறது. மேலும், சிங்கப்பூர் மத்தியஸ்த ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டிருப்பதால் உள்நாட்டு மற்றும் சர்வதேச மத்தியஸ்தம் தொடர்பான பிரச்சினைகளில் மத்தியஸ்தம் செய்வதற்கான சட்டத்தை இயற்றுவதும் தேவையாக உள்ளது.

அதன்படி, மத்தியஸ்தத்தை ஊக்குவித்தல் மற்றும் எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, மேலே கூறப்பட்ட வரைவு மசோதாவின் நகல், கருத்துக்களுக்காக சட்ட விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் (http://legalaffairs.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1769531

------



(Release ID: 1769581) Visitor Counter : 429


Read this release in: English , Urdu , Hindi , Bengali