உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
புவனேஸ்வர்-ஜெய்ப்பூர் இடையேயான முதல் நேரடி விமானத்தை திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா தொடங்கி வைத்தார்
Posted On:
02 NOV 2021 2:23PM by PIB Chennai
புவனேஸ்வர்-ஜெய்ப்பூர் இடையேயான முதல் நேரடி விமானத்தை மத்திய்ச் விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு சிந்தியா, “புவனேஸ்வர் கோயில்களின் நகரம். இது இந்து, பௌத்த மற்றும் சமண சமூகங்களின் ஆன்மிக மையமாகும். மேலும், இந்த நகரம் ஒரு ஆன்மிக மையமாக இருப்பதைத் தவிர, நாட்டின் ஸ்மார்ட் சிட்டிகளின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி மையங்களில் புவனேஸ்வர் ஒன்றாகும். தற்போது புவனேஸ்வர் 19 நகரங்களுடன் 38 விமான சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
நமது பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளபடி, 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற லட்சிய இலக்கை அடைவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது என்று திரு சிந்தியா மேலும் கூறினார். நமது அனைத்து விமான நிலையங்களையும் பசுமை விமான நிலையங்களாக மாற்ற நிலையான எரிசக்தி வளங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
புவனேஸ்வர் மற்றும் ஜெய்ப்பூர் இடையே இந்த புதிய விமானங்கள் மூலம், விமான சேவைகளுக்கான விருப்பதேர்வுகளை பயணிகள் பெறுவார்கள். சுற்றுலா திறனை இது அதிகரிப்பதோடு, பிராந்தியத்தின் பொருளாதார செயல்பாட்டையும் மேம்படுத்தும்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1768868
*****
(Release ID: 1769040)
Visitor Counter : 215