மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டன்ட்டுகள் (நிர்வாகம்) வரையறுக்கப்பட்ட துறைசார்ந்த போட்டித் தேர்வு, 2020-ன் இறுதி முடிவுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2021 7:19PM by PIB Chennai

2020 மார்ச் 1 அன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் உதவி கமாண்டன்ட்டுகள் (நிர்வாகம்) வரையறுக்கப்பட்ட துறைசார்ந்த போட்டித் தேர்வின் எழுத்துப் பகுதியின் முடிவுகள் மற்றும் 2021 அக்டோபர் 25 முதல் 28 வரை நடைபெற்ற ஆளுமைத் தேர்வுக்கான நேர்காணல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் உதவி கமாண்டன்ட்டுகள் (நிர்வாகம்) பதவிகளுக்கு நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையிலான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுப்பிரிவில் இருந்து 20 பேரும், பட்டியல் பிரிவில் இருந்து 2 நபர்களும், பழங்குடி பிரிவில் இருந்து ஒருவரும் என மொத்தம் 23 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

காலியிடங்களின் எண்ணிக்கையும் மேற்கண்டவாறே உள்ளது.

தேர்வு விதிகள் மற்றும் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் படி நியமனங்கள் செய்யப்பட வேண்டும்.

www.upsc.gov.in எனும் தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மேலும் விவரங்களுக்கு 011-23385271/23381125 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1768628

****


(வெளியீட்டு அடையாள எண்: 1768687) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी