குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மருத்துவ தொழிலில் மனிதவள பற்றாக்குறைப் பிரச்சனைக்கு அவசர தீர்வுகாண வேண்டியது அவசியம்- குடியரசு துணைத் தலைவர்


கிராமப்புறங்களில் தொலைமருத்துவ வசதிகளை உருவாக்க, தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் வலிமையை பயன்படுத்த குடியரசு துணைத்தலைவர் அழைப்பு

உங்களது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்- மருத்துவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுரை

சுகாதார சேவைகள் குறைந்த செலவில் எளிதில் கிடைக்கச் செய்யவேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

முழுமையாக இயல்புநிலை திரும்பும்வரை கோவிட் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்

‘பரபரப்புத் தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பொறுப்புள்ள’ தலைவராக விரும்ப வேண்டும்- மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர்

விஜயவாடாவிலுள்ள டாக்டர் பின்னமனேனி சித்தார்த்தா மருத்துவ கல்வி நிறுவணம் & ஆராய்ச்சி மையத்தில் ஆக்சிஜன் ஆலையைக் குடியரசுத் துணைத்தலைவர் தொடங்கி வைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

Posted On: 01 NOV 2021 2:28PM by PIB Chennai

மருத்துவத் தொழிலில் மனிதவளப் பற்றாக்குறை பிரச்சணைக்கு அவசரத்தீர்வு காணவேண்டியது அவசியம் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு வலியுறுத்தியுள்ளார். நமது சுகாதார கட்டமைப்பை, தொடக்க நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு விரிவுபடுத்த வேண்டியதன் தேவையை கொவிட் 19 பெருந்தொற்று உணர்த்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விஜயவாடாவிலுள்ள சித்தார்த்தா மருத்துவக் கல்லூரியில் புதிய பிரிவுகள் மற்றும் அதி நவீன சாதனங்களை தொடங்கி வைத்து, மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய குடியரசு துணைத் தலைவர், உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, 2024-க்குள் ஆயிரம் மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தை அடையும் திசையில் இந்தியா சென்றுகொண்டிருப்பது. மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அடுத்த 5 அண்டுகளுக்குள் கிராமப்புறங்கள் முதல் தேசிய அளவில், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கத்தை தொடங்கியிருப்பதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, மருத்துவத்தொழில் வணிகமயமாவது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், இளம் மருத்துவ பட்டதாரிகள் நோயளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றார். மருத்துவத்தொழில் புனிதமான தொழில்களில் ஒன்று என்பதால், உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் தார்மீகத் தரத்தை பின்பற்றவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் தொலைமருத்துவ சேவை வழங்குவது உள்ளிட்ட பல துறைகளில், அரசு-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டுமெனவும் திரு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768470

*******



(Release ID: 1768491) Visitor Counter : 199