தேர்தல் ஆணையம்
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்ட மேலவைக்கு இரண்டுஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் அறிவிப்பு
Posted On:
31 OCT 2021 1:03PM by PIB Chennai
ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா சட்ட மேலவைக்கு, சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட , சட்ட மேலவை உறுப்பினர்கள் 9 பேரின் பதவிக்காலம் கடந்த மே 31 மற்றும் ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. கொரோனா 2ம் அலை காரணமாக இந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடத்தவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து சாதகமான சூழல் நிலவுவதால், இந்த தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கான மேலவை தேர்தல், வரும் நவம்பர் 29ம் தேதி அன்ற காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா தலைமை செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1768069
****
(Release ID: 1768148)
Visitor Counter : 204