ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒற்றுமை வாரத்தை கொண்டாடுகிறது தேசிய ரயில் அருங்காட்சியகம்: இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை சர்தார் வல்லபாய் படேல் கண்காட்சி

Posted On: 31 OCT 2021 11:29AM by PIB Chennai

சர்தார் படேல் பற்றிய கண்காட்சியை அமைத்து ஒற்றுமை வாரத்தை, இன்று முதல் நவம்பர் 14ம் தேதி வரை  இந்திய ரயில்வேயின் தேசிய ரயில் அருங்காட்சியகம்  கொண்டாடுகிறது. இந்த கண்காட்சி தில்லியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

 

இந்திய மாநிலங்களை ஒருங்கிணைக்க, முக்கிய முயற்சிகள்  மேற்கொண்டதற்காக சர்தார் வல்லபாய் படேல் நினைவு கூறப்படுகிறார். இந்தியாவின் இரும்பு மனிதரின் உத்வேகம் தரும் வாழ்க்கைப் பயணம், நாட்டை இணைக்கும் இந்திய ரயில்வேயின் இரும்புப் பாதைகளை நினைவு படுத்துகிறது. ஆகையால், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, இந்த கண்காட்சி  மூலம் தேசிய ரயில் அருங்காட்சியகம் புகழாரம் சூட்டுகிறது. இந்த கண்காட்சி, 2021 நவம்பர் 14ம் தேதி வரை, திறந்திருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்காக, சர்தார் படேலின் பங்களிப்பை கொண்டாட பொது மக்களுக்கு  தேசிய ரயில் அருங்காட்சிகம் அழைப்பு விடுக்கிறது மற்றும் இந்திய ரயில்வே நாட்டை ஒன்றாக இணைக்கிறது.

****


(Release ID: 1768108)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi