சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
கூட்டு பிராந்திய மையத்தின் மறுவாழ்வு மற்றும் விடுதி கட்டிடத்தை லக்னோவில் அமைச்சர் திறந்து வைத்தார்
Posted On:
30 OCT 2021 3:57PM by PIB Chennai
லக்னோவில் உள்ள ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தின் (CRC) மறுவாழ்வு மற்றும் விடுதி கட்டிடத்தை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் இன்று திறந்து வைத்தார்.
லக்னோவின் உள்ள மறுவாழ்வு கட்டிடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு சிகிச்சை மற்றும் சேவைகளை வழங்குவதற்கான நவீன வசதிகள் உள்ளன. சிறப்புக் கல்வியில் (பார்வை குறைபாடு மற்றும் அறிவுசார்ந்த) பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளை இம்மையம் நடத்துகிறது.
இந்திய மறுவாழ்வு குழு அங்கீகரித்த புனர்வாழ்வு அறிவியல் மற்றும் மாற்றுத் திறனாளிகள் படிப்புகளில் 200 மாணவர்களுக்கு தங்கும் வசதியை இந்த விடுதிக் கட்டிடம் கொண்டுள்ளது.
சமுதாயம் சார்ந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தையும் அமைச்சர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் உரையாடினார்.
இந்த அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய அவர், மாணவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாணவர்களின் உரிய முயற்சியுடன் படிப்பை முடித்து திறமை, அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வரவிருக்கும் பிரிவுகளுக்கான தரத்தை நிர்ணயிக்குமாறு மாணவர்களை அவர் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளை சமூக நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய மறுவாழ்வு பணியாளர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767898
********
(Release ID: 1767967)
Visitor Counter : 151