பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண்களுக்கான அனைத்திந்திய சட்ட விழிப்புணர்வு திட்டத்தை நால்சா உடன் இணைந்து தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது
Posted On:
30 OCT 2021 4:23PM by PIB Chennai
பெண்களுக்கான அனைத்திந்திய சட்ட விழிப்புணர்வு திட்டத்தை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்துடன் (நால்சா) இணைந்து தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது.
பெண்கள் தொடர்பான பல்வேறு சட்டங்கள் வழங்கும் உரிமைகள் மற்றும் தீர்வுகள் குறித்த நடைமுறை அறிவை வழங்கி நிஜ வாழ்வின் சவால்களை பெண்கள் எதிர்கொள்ள செய்வதே "சட்ட விழிப்புணர்வின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்" எனும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியும் நால்சா செயல் தலைவருமான மாண்புமிகு யு யு லலித், தேசிய மகளிர் ஆணையத் தலைவி திருமதி ரேகா ஷர்மா ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு டி ஒய் சந்திரசூட் மற்றும் இதர பிரமுகர்களின் முன்னிலையில் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி யு யு லலித், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டார்.
"இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். தேசிய மகளிர் ஆணையத்துடன் இணைந்து, பெண்களுக்கான இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நால்சா ஏற்பாடு செய்து வருகிறது என்பதை நான் பெருமையுடன் கூறுகிறேன்" என்று அவர் கூறினார்.
“இத்திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதால், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள பெண்களுக்கு அவர்கள் பயிற்சி அளிப்பதோடு, அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள்" என்று நீதிபதி லலித் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1767904
********
(Release ID: 1767954)
Visitor Counter : 776