நிலக்கரி அமைச்சகம்
அனல் மின் நிலையங்களுக்கு 22 லட்சம் டன் நிலக்கரி விநியோகித்து சாதனை படைத்ததற்காக நிலக்கரி நிறுவனங்களுக்கு அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி பாராட்டு
प्रविष्टि तिथि:
30 OCT 2021 4:19PM by PIB Chennai
அனல் மின் நிலையங்களுக்கு 28, அக்டோபர் 2021 வியாழன் அன்று 22 லட்சம் டன் நிலக்கரியை அனுப்பி நிலக்கரித்துறை சாதனை படைத்திருப்பது குறித்து மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், மேற்குறிப்பிட்ட அளவில், 18 லட்சம் டன் நிலக்கரி, கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சாதனையை படைத்த அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ள அமைச்சர் திரு.ஜோஷி, நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொடர்ந்து அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
******
(रिलीज़ आईडी: 1767930)
आगंतुक पटल : 249