அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதைபடிவ எரிபொருள் இல்லாத பொருளாதாரம் என்ற இறுதி இலக்கை அடைவதில் எரிசக்தி துறையில் இந்தோ-ஸ்வீடன் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 26 OCT 2021 4:05PM by PIB Chennai

இந்திய-ஸ்வீடன் புதுமைகள் கூட்டத்தில் இன்று உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், புதைபடிவ எரிபொருள் இல்லாத பொருளாதாரம் என்ற இறுதி இலக்கை அடைவதில் எரிசக்தி துறையில் இந்தோ-ஸ்வீடன் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.

இந்தியா ஸ்வீடன் பசுமை மாற்றத்தை துரிதப்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்ற எட்டாவது இந்தியா-ஸ்வீடன் புத்தாக்க தின கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஏப்ரல் 2018-ல் பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஸ்டாக்ஹோம் பயணத்தின் போது எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு ஒரு முக்கிய பகுதியாக அடையாளம் காணப்பட்டது என்றார்.

தூய்மையான எரிசக்திக்கான தொழில்நுட்ப தீர்வுகளை இந்தியா தேடுகிறது என்று கூறிய அவர், பொருட்களின் இணையம் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்), இயந்திர கற்றல், வட்ட வடிவிலான பொருளாதாரம் ஆகியவற்றில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் ஸ்வீடிஷ் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க அமைச்சகம் இணைந்து செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

இந்திய மற்றும் ஸ்வீடன் விஞ்ஞானிகளை பாராட்டிய மைச்சர், இருதரப்பு உறவுகளின் முக்கிய அங்கமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நிலவும் கூட்டுறவு விளங்குவதாக கூறினார்.

ஸ்வீடன் வர்த்தகம், தொழில்துறை மற்றும் புதுமைகள் அமைச்சர் திரு இப்ராகிம் பாய்லான் பேசுகையில், இரு நாடுகளுக்கிடையேயான கூட்டு பெருந்தொற்றின் போதும் தொடர்ந்தது என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766629

----



(Release ID: 1766734) Visitor Counter : 217


Read this release in: English , Urdu , Urdu , Hindi , Punjabi