கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தா சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு

प्रविष्टि तिथि: 26 OCT 2021 4:03PM by PIB Chennai

கொல்கத்தா சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் இன்று அனுசரிக்கப்பட்டது. சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் தலைவர் திரு வினீத் குமார் நேர்மைக்கான உறுதிமொழியை செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துறைமுகத்தின் துணைத்தலைவர்கள்  மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர்ஃ

இந்நிகழ்ச்சியில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் குறித்து குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் தெரிவித்த செய்திகள் இந்தக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. பொது நலன்களை தெரியப்படுத்துதல் மற்றும் தகவல் அளிப்போரைப் பாதுகாத்தல் தீர்மானம் (PIDPI) குறித்து சுருக்கமான விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தகவல்கள் குறித்த பல அம்சங்களை அமல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துறைமுகத்தலைவர் திரு வினீத் குமார் விளக்கினார்.

-----------------


(रिलीज़ आईडी: 1766708) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi