சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சிதறிய ஆதாரங்களில் இருந்து ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டம் தில்லியில் வரும் குளிர்காலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும்: காற்று தர மேலாண்மை ஆணையம்
Posted On:
26 OCT 2021 1:53PM by PIB Chennai
சிதறிய ஆதாரங்களில் இருந்து தில்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, அதை கட்டுப்படுத்தும் திட்டம் வரும் குளிர்காலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தெற்கு தில்லி மாநகராட்சியின் மாதிரி திட்டத்தின் முன்னேற்றம் செப்டம்பர் 2021-ல் மதிப்பாய்வு செய்யப்பட்டது. திட்டத்தில் இருந்து கற்றுக்கொண்டதன் அடிப்படையில், அதே திட்டம் இப்போது வடக்கு தில்லி, கிழக்கு தில்லி மாநகராட்சிகள் மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் ஆகியவற்றில் குளிர் காலத்தில் மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரியளவில் செயல்படுத்தப்படுகிறது.
காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனைகளை எளிதில் அடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பது இத்திட்டத்தின் இலக்காகும். இவ்வகையான மாசின் முக்கிய ஆதாரம் குப்பைக் கிடங்குகள், குப்பைகளை எரித்தல், கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்பு, வாகனங்களினால் ஏற்படும் மாசு, பொது இடத்தில் குப்பை கொட்டுவது, செப்பனிடப்படாத சாலைகள் மற்றும் தரிசு நிலத்தின் தூசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1766557
******
(Release ID: 1766705)
Visitor Counter : 235