குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நான்கு நாடுகளின் தூதர்கள் தங்களின் நியமனச் சான்றுகளை இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு

प्रविष्टि तिथि: 26 OCT 2021 2:22PM by PIB Chennai

லக்சம்பர்க், சால்வேனியா குடியரசு, இஸ்ரேல் மற்றும் எகிப்து, ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் நியமனச் சான்றுகளை குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று ஏற்றுக் கொண்டார்.  கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு முதல் முறையாக இந்நிகழ்ச்சி நேரடியாக நடைபெறுகிறது.  நியமனச் சான்றுகளை அளித்தவர்களின் விவரம் :

  1. மேதகு திருமிகு பெகி பிரான்ட்சன், லக்சம்பர்க் தூதர்
  2. மேதகு திருமிகு மதேஜா, வோடப் கோஷ் , சால்வேனிய தூதர்
  3. மேதகு திரு நோர் கிலான், இஸ்ரேல் தூதர்
  4. மேதகு திரு வால் முகமது அவாத் ஹமீது, எகிப்து தூதர்

இந்த நியமனச் சான்றுகளை அளித்தப் பின்  நான்கு தூதர்களிடமும் குடியரசுத்தலைவர் தனித்தனியாக கலந்துரையாடினார். இந்த நியமனத்துக்காக புதிய தூதர்களை குடியரசுத்தலைவர் வாழ்த்தினார்.  அவர்கள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடலின் போது மேற்கண்ட நாடுகளுடன் இந்தியாவின் நெருங்கிய உறவை குடியரசுத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

தூதர்கள் மூலம் அவர்களது நாட்டின் தலைவர்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.  இந்தியாவுடனான உறவைப்  வலுப்படுத்துவதாக புதிய தூதர்கள் உறுதி அளித்தனர். 

-----


(रिलीज़ आईडी: 1766667) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati